சிம்புவுடன் இணையும் நடிகை

இதனை SHARE பண்ணுங்க

சிம்புவுடன் இணையும் நடிகை

சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய புதிய அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இறுதி கட்டத்தில் சிம்புவுடன் இணையும் நடிகை
சிம்பு – சிட்தி இட்னானி


மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல

வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்

இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் மற்றொரு கதாநாயகியாக சிட்தி இட்னானி இணைந்திருக்கிறார்.

பாவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிட்தி இட்னானியை படக்குழுவினர் இன்று வரவேற்பு போஸ்டர்

ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிம்பு, சிட்தி இட்னானி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜனவரி 3 ஆம் தேதி முதல் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply