சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
Spread the love

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி நம்ம வீட்டில் மிக சுவையாக கடை சுவையில் செய்வது எப்படிஎன்பதை வாங்க இதில் பார்க்கலாம் .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,சிக்கன் பிரியாணி வாங்க செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

சிக்கன் பிரியாணி செய்முறை ஒன்று

அடுப்பை சூடாக்கி பாத்திரம் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ,நெய் விட்டு சூடானதும் ,மூணு பிரியாணி இலை ,நான்கு பட்டை ,மூன்று ஸ்டார் பூ ,ஏலக்காய் ,கராம்பு நான்கு ,பொடியாக்கி வெட்டிய மூன்று பெரிய வெங்காயம் ,போட்டு நன்றாக பொன்னிறமா வரும் வரை வதக்கிடுங்க .

இந்த படத்தில் உள்ளது போல
இந்த படத்தில் உள்ளது போல

அப்புறமா பொடியாக வெட்டிய தக்காளி ,ஐந்து பச்சை மிளகாய் ,இணைத்து நன்றாக வதக்கி வாங்க ,அப்புறம் ஐந்து கரண்டி இஞ்சி பூண்டு அரைச்சு சேர்த்திடுங்க ,கூடவே இக்காயளவு புதினா ,வதக்கிய பின்னர் துண்டுகளாக வெட்டிய சிக்கன் சேர்த்து இது கூட பிரட்டி விடுங்க .

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி

இப்பொழுது இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,
கரம் மசாலா இரண்டு கரண்டி ,சேர்த்து நனறாக வதங்கிய பின்னர் கொஞ்ச நீர் ஊற்றிஒரு நிமிடம் வேக விடுங்க .

அப்புறம் தேவையான தயிர் ,சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு ,தண்ணி சேர்த்து ,கூடவே தேவையான உப்பு ,அரை கரண்டி தேசிக்காய் ,சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடுங்க .

அப்புறம் கழுவி வைத்த பசுமதி அரிசி எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி ,கொஞ்சம் புதினா ,கொத்த மல்லி ,போட்டு பத்து நிமிடம் மூடி வைங்க .

வேகி வந்ததும் ஒரு கரண்டி எண்ணெய் எடுத்து மேலே, ஊற்றி கிளறி விடுங்க .
அடுப்பு தீயை குறைத்து மேலும் 10 நிமிடம் வேக வைத்திடுங்க .

chicken biryani instant pot
chicken biryani instant pot

இப்போ கடை சுவையில் செம்மையான சிக்கன் பிரியாணி ரெடியாகிடுச்சு .இது போல பிரியாணி நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .