சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் புகுந்த பேருந்து
Spread the love

சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நேற்று(03) இரவு 7 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பஸ் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பஸ் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பஸ்ஸின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.