சாகடிக்கப்படும் நல்லிணக்கம் – உருவெடுத் தாடும் பவுத்த வெறி ,

இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் தமிழின பாடுகொலையாளிகள் மீளவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் சாகடிக்கப்படும் நல்லிணக்கம் நல்லிணக்கம் சாகடிக்க படுகிறது .

நாடு மீளவும் நல்லிணக்கத்தின் செயல்பாட்டு தன்மை இழந்து சர்வாதிகார ,ஆட்சியாக மாற்றம் பெற்று செல்கிறது .

இறுதி போரில் புலிகளையும் மக்களையும் கொத்து கொத்தாக கொன்று குவித்தது ஏப்பம் விட்ட கோட்டபாய .

நாட்டின் அதிபராக வலம் வரும் இவ்வேளையில் பவுத்த பீடாதி பீடமும் ,பிக்குகளும் மூன்று காலில் முன்னேறி நடந்து வருகின்றனர் .

இரண்டு நாக்குகளினால் பேசுகின்ற்னர் .
இனம் ,மதம் ,அதன் ஒன்றுபடுதல் ஒற்றுமை கிழிந்து சீழாகி ஓடுகிறது .சாகடிக்கப்படும் நல்லிணக்கம்

போரை வென்ற புனிதன் எனவும் மகா வம்சத்தின் புதிய கதாநாயகனாக தன்னை உருவ படுத்தி கொள்ளும் கோட்டா , மீளவும் இலங்கையில் இரும்பு கரம் கொண்டு இராணு ஆதிக்க அடக்குமுறை அவிழ்த்து விட்டுள்ளார் .

இலங்கையில் சாகடிக்கப்படும் நல்லிணக்கம்

தனி சிங்கள வாக்குகளினால் வென்றவன் என்ற இறு மாப்புடனும் தொடர்ந்தும் தான் இவ்வாறே வென்று நிமிர்வேன் எனவும் என்னும் கோட்டா ,சிங்கள மக்கள் சாகுவரை தன்னை பாதுகாப்பார்கள் என்ற வறட்டு ,மலட்டு சிந்தனை போக்கில் உலவி வருகிறார் .சாகடிக்கப்படும் நல்லிணக்கம்

இவரது இந்த சிந்தனை போக்கு எதுவரை நகரத்தி செல்லும் …?
இனங்களுக்கு இடையி ல் ஒன்று பட மறுத்து இரண்டு பட்டு தனது நிழல்கள் மூலம் நாள்தோறும் வன்முறைகளை கட்டவிழ்த்து வரும் கோத்தா மீளவும் ஒரு முள்ளி வாய்க்கள் நோக்கி நகர்ந்து செல்கிறார் .

இது இலங்கை வராலற்றில் கடக்க போகும் மிக பெரும் நெருப்பாற்று நீச்சலுக்குள் சிங்கள பவுத்த மேலாண்மை சிக்கி கொள்ள போகிறது .

ஆண்டுகள் தோறும் அடக்கி ஒடுக்கி அடிமைப்பட்டு போன சிறுபான்மை சமூகம் மீளவும் இதே பிராந்திய வல்லாதிக்க போட்டியில் தாழ்ந்து போகும் என்று சிங்களம் கனவு காண்பது வேடிக்கையான ஒன்றாகும் .

அதுவே புதிய தென் ஆசியாவின் வாசல் திறப்புக்கும் போருக்குமான வழி கோலாகவும் அமைய போகிறது.

.இப்போது பந்து கோட்டாவின் காலில் உள்ளது .உள்ளா வெளியா என்பதை அவரது சிந்தனை தீர்மானிக்கும் களமாக மாறப் போகிறது .

நீண்டு செல்லும் இவனவெறியும் ,அதன் மேல் ஏறி ஆடும் பவுத்த மேலாதிக்கமும் இலங்கையில் வீழ்ந்து தணியும் வரை நல்லிணக்கம் உயிர் பெறாது .

இலங்கையில் , சிறுபான்மை தமிழினம் மியான்மார் போன்ற அழிவு பாதையில் செல்லும் என்றே எண்ணம் கருக் கொள்கிறது .

வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கையில் இவர்கள் ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை உயிர் பெற்றால் மட்டுமே சிங்கள தனி சட்டமும் ,அதன் பவுத்த மேலாண்மை வெறியும் அடக்கி ஒடுக்க படும் .

அது அல்லாது நகரும் எனின் தமிழர் வாழ்வும் ,அவர்களது வாழ்வுரிமையும் இலங்கை தேசத்தில் கேள்வியான ஒன்றாக மாற்றம் பெறுவதை யாரும் தடுத்துவிட விட முடியாது .

புலம் பெயர் தமிழ் சமூகத்தின் தீரமானதும் ,தீர்க்கமானதும் செயல் பாட்டின் ஊடாகவே இலங்கை தமிழ் இனக் கொலைக்கும் அதன் ஆட்சியாளருக்கு தகுந்த தீர்வையும் ,தண்டனையும் வாங்கி தர இயலும் .

ஒன்று பட்டு ஒருகுடையின் கீழ் செல்ல வேண்டிய நேரம் இது ,ஒன்று பாட்டால் மட்டுமே வென்று நிமிர முடியும் .

தமிழர் தேசம் சிந்தித்து செயல் ஆற்றுமா ..? விட்ட இடம் தொட்டு தனது தேரை இழுத்து செல்லுமா ..?

வரும் காலம் இதன் பார்வை வரலாறாக எழுதி கொள்ள தயராகிறது .முடிந்து போன ஒன்றில் இருந்து தொடங்கும் நேரம் .

எழுந்து தீர்வு எழுத்து காலம், எதிர்காலத்தின் வாசல் திறக்கிறது .உலக போரியல் விதி இதற்கு தூணாக மாறி மாற்றம் கொள்கிறது .

  • வன்னி மைந்தன் –

இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply