சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போய் இருந்ததாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நில்சிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி
- அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது
- ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
- வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை
- மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்
- 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்
- அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
- வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்
- சீமான் அர்ச்சுனா மோதல்