கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.

உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது