கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.