கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
Spread the love

கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த கட்டணங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான சுற்றுலா ஹோட்டல் அறைக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 100 அமெரிக்க டொலர்களும் நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 75 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு

மூன்று நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 50 அமெரிக்க டொலர்களும், இரண்டு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 35 அமெரிக்க டொலர்களும், ஒரு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்பட வேண்டும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த விலைகள் 24 மணிநேர காலத்திற்காக செலுத்தப்பட வேண்டும் எனவும் சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் அல்லது வழங்கப்பட்ட பிற சேவைகள் அல்லது வசதிகளுக்கான கட்டணங்கள் ஆகியவை அதில் உள்ளடங்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர, விருந்தினருக்கான உணவு விலைகளையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதியில் ஒருவருக்கு காலை உணவிற்காக 10 அமெரிக்க டொலர்களும், மதிய உணவிற்கு 15 அமெரிக்க டொலர்களும், இரவு உணவிற்கு 17 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு, காலை உணவுக்கு 9 அமெரிக்க டொலர்களும்,, மதிய உணவுக்கு 14 அமெரிக்க டொலர்களும், இரவு உணவிற்கு 16 அமெரிக்க டொலர்களும், என விலைகள் வெளியிடப்பட்டுள்ளன