கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
Spread the love

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.