கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கைது செய்துள்ளனர்.

காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் வானத்தை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை