கொழும்பில் பெண் கொலை

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Spread the love

கொழும்பில் பெண் கொலை

கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு இன்று காலை 11 மணியளவில் தனது காதலனுடன் பேசுவதற்காக குதிரை பந்தயத் திடாலை நோக்கி சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது காதலனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் பெண் கொலை

சம்பவத்தின் போது குறித்த இளைஞன், குதிரை பந்தயத் திடாலுக்கு அருகே நடந்து செல்வது அருகிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.

உயிரிழந்த யுவதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காதலனிடம் உறவை முறித்துக் கொள்ளுமாறு யோசனை கூறியுள்ளார்.

எனினும், தனது காதலி வேறொருவருக்கு
சொந்தமாகிவிடுவார் என எண்ணி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No posts found.