கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

இன்று (30) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன