கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Spread the love

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.