
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
119 அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 5 அடி 10 அங்குல உயரம் கொண்ட ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்