
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுப்பு
மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் 4 சந்தேக நபர்கள் கடந்த 3 மாதம் 25 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
குறித்த வழக்கானது நேற்று (08) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த மரணம் இறந்த நபரின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட
முதல் அறிக்கையையும், மேற்கொள்காட்டி சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகி சட்டத்தரணி செ. டினேசன் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுப்பு
அதனை தொடர்ந்து வழக்கில் மடு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட கடந்த கால அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் குறித்த 4 சந்தேக நபர்களும் வழக்கிலிருந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பான வழக்குகளில் மேல் நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை வழங்கப்படுகின்ற நிலையில் குறித்த வழக்கில் விசேட காரணங்களின் அடிப்படையில் நீதவான் நீதிமன்றத்தால் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.