
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) மாலை கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட
ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய மீகஹவத்த மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுதொழில் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை சுட்டுக்கொலை செய்ய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பேலியகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா
- சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
- சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது
- இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
- 21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு
- இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
- போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
- சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்
- ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
- மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு