கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு | இலங்கை செய்திகள்

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
இதனை SHARE பண்ணுங்க

இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு |

இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


இதனை SHARE பண்ணுங்க