கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்


வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது