கெமராவில் பதிவான கோர விபத்து

கெமராவில் பதிவான கோர விபத்து
Spread the love

கெமராவில் பதிவான கோர விபத்து

பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து கெப் வண்டியின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கெப் வண்டி, முன்னால் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​கெப் வண்டியின் அதிவேகத்தினால் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் சேவை நிலையம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கெமராவில் பதிவான கோர விபத்து

இந்த விபத்தில் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கும் பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெப் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது