பெண்கள் குளிர்பானம் பருகினால் வரும் பிரச்சனைகள்

பெண்கள் குளிர்பானம் பருகினால் வரும் பிரச்சனைகள்

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது

அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானங்கள் மற்றும் அது தொடர்புடைய பழ சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் 16 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு 81,714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். 12 ஆண்டுகளாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த

பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ‘பிராண்ட்’ குளிர் பானத்தை பற்றி நடத்தப்பட்ட ஆய்வு அல்ல!

உடல் பருமமான பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பெண்களை விட அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இருமடங்கு

அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பானங்களை

பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும்

பருகக்கூடாது. கலோரிகள் அல்லாத பானங்களை பருகுவதே நல்லது. எத்தகைய ரசாயனமும்

கலக் காத தண்ணீர் பருகுவதே சிறப்பானது என்று அமெரிக்க இதய நோய்த்துறைக்கான அமைப்பு கூறியுள்ளது.

    Leave a Reply