குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்

குளவி கொட்டு ஐவர் பாதிப்பு
Spread the love

குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்

ஹந்தானை மலையில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்

குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற வந்துள்ளதாகவும் ஏனைய

மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.