குடு தானு சிக்கினார்

குடு தானு சிக்கினார்
Spread the love

குடு தானு சிக்கினார்

1 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், ‘குடு தானு’ என்று பிரபலமாக அறியப்பட்டவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி பிரமுகரான “மாத்தரா கல்பா” என்பவரின் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

குடு தானு சிக்கினார்

இதற்கமைய, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில் இன்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதன்படி, 1 கிலோ 50 கிராம் எடையுள்ள ‘ஐஸ், இலத்திரனியல் தராசு, ரூ.12,000 ரொக்கம் போதை பொருள் கடத்தல் மற்றும் தொலைபேசி திருட்டு ஆகியவற்றில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ