குடும்பஸ்தர் ஓட ஓட வெட்டிக்கொலை

வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Spread the love

குடும்பஸ்தர் ஓட ஓட வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தியில் நேற்றிரவு ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் – இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குறித்த நபரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து
விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.