குடிமகனாக மாறிய சேரன்

Spread the love

குடிமகனாக மாறிய சேரன்


தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய சேரன், தற்போது தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

தமிழ்க் குடிமகனாக மாறிய சேரன்
சேரன்


பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன்.

கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில்

உருவாகி இருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சேரன்
ஸ்ரீ பிரியங்கா – சேரன்

இந்நிலையில், சேரன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.

மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசக்கி

கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

Author: நலன் விரும்பி

Leave a Reply