
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
இதற்கிடையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் பீரிஸ் பிரதேசத்தின், கடலோர பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 55-60 வயதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
- பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
- கொதிக்கலனுக்குள் வீழ்ந்து இந்தியர் மரணம்
- தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
- மனைவியை காணவில்லை தேடும் கணவன்
- உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
- இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்
- இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
- என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
- மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது