கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா அட்டோ அக்குபோ – அட்டோவையும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமேவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறிப்பாக விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.