காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
உள்நாட்டு போர் வெடிக்க
ஊந்துகணை வாசல் விழ
கதறி வாய் குழற
கால் பிடித்து நாமோட
சிங்களத்து வாசலிலே
சிறை பட்டு நான்கிடக்க
ஓடி வந்தென்னை
ஒத்திக்கு எடுத்தவரே
வேரூன்றி யான் நிமிர
வேண்டுதல் செய்தவரே
உன்செயல் கடன்தீர்க்க
உள்ளத்தால் முடியலையே
ஆண்டு பல கடந்திருச்சு
ஆனாலும் இயலையே
மறந்துவிட்டேன் என்றே
மனதில் நினைத்திருப்பாய்
ஆவி பிரியு முன்னே
அக்கடனை யான் முடிப்பேன்
உன் செயல் யான் மறப்பின்
உலகம் அழிந்து விடும்
விரைவில் கை பேசி
விடயம் பகிரும்
அன்று வியப்பாய்
அழுதே களைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-12-2021
- சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
- எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
- திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
- மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்| இலங்கை செய்திகள்
- ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது
- மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம்; பெருந்தோட்ட பிரிவினருக்கு வறுமை நிவாரணம் அவசியம்
- தீயாக பரவும் பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு
- 10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு
- வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி
- கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
- புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
- அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
- இந்தியாவுக்கு ஆயுதம் வழங்காது ஏமாற்றிய ரஷ்யா
- முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி