காத்தான்குடியில் திடீர் சுற்றி வளைப்பு 27 பேர் மீது வழக்கு
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (14) மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 27 பேர் சிக்கியதுடன் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
திங்கட்கிழமை (14) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி ஆரையம்பதி, நாவற்குடா, கல்லடி பிரதேசங்களில் இத்திடீர் சுற்றி வளைப்பினை மோட்டார் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
காத்தான்குடியில் திடீர் சுற்றி வளைப்பு 27 பேர் மீது வழக்கு
இதன்போது மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமை, காப்புறுதி மற்றும் தஸ்தாவேஜூகள் இல்லாமை, தலைக்கவசம் அணியாதது போன்ற காரணங்களால் 27 பேர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.