காற்றை காதல் செய்யும் பெண் …!
ஆடை உள்புகுந்து
அள்ளி தழுவுகிறாய் ….
வீதியில் போகையில
விரட்டாமல் விட்டு விடு …
மிதி வண்டி மிதிக்கையிலே
கீழாடை தூக்கிறியே ….
ஒத்த கையால் நான் பிடிச்சு – வண்டி
ஓட்ட வைக்கிறியே ….
அந்தி வரும் வேளையிலே
அயராது வந்து விடு ….
வேர்வை கழன்று விழும்
வேலை அகற்றி விடு …..
உள்ளே நீ புகுந்து
உன் விருப்பில் நீயாடு ….
நீண்டு நானுறங்க
நீ வந்து தாலாட்டு …..
சந்தியில பந்தியிலே
சத்தம் போடாதே …
சம்மதம் தந்து நின்ற
சங்கதி சொல்லாதே …..
தென்றலே வந்து கொஞ்சு
தென்மாங்கு நீ பாடு …
நீயில்லா உலகிலே
நின் உயிர் வாழாதே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/04/2019