உன் காதலை சொல்லிடு …!

உன் காதலை சொல்லிடு …!

நான் உலாவும் வீதியிலே
நாளை நீயும் உலவிடு
நானும் நொந்த நாளினையே
நகல் எடுத்து சென்றிடு

ஆள் உலாவும் வீதியிலே
அமைதியானால் ஏற்று விடு
அன்பு உலாவும் வீதியிலே
அமைதி ஆனாய் செத்திடு

வான் நிலவு வீதியிலே
வந்து விட்டால் பார்த்திடு
வந்து நின்ற செய்தியென்ன
வாசல் வந்து சொல்லிடு

ஏற்று விட்டால் என்னன்பே
ஏறி வந்து சொல்லிடு
என்னுறக்கம் தொலைத்த நாளை
எழுதி வைத்து சென்றிடு

உன்னுறக்கம் நீ தொலைத்தால்
உள்ளம் என்னை ஏற்றிடு
உன் உளமதில் யானமர்ந்தேன்
ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 26-12-2021

    Leave a Reply