காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்

காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்

காதலியின் கணவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்ததால், பயத்தில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்.


உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹ்சின். இவர் உத்தர காண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கூட்டிக்கொண்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஓடிவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

ஜெய்ப்பூரில் ஒரு வீட்டில் அந்த பெண்ணை வாடகைக்கு அமர்த்திய மோஹ்சின், தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இருந்தாலும் அந்த பெண்ணுடன் தனது நட்பை வளர்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணுடன் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளார் மோஹ்சின்

இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர், இவர்களை தேடிவந்துள்ளார். ஒரு வழியாக சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெய்ப்பூரில் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் கணவர், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது மோஹ்சினுடன் பெண் இருந்துள்ளார். மோஹ்சின் அந்த பெண்ணின் கணவரை பார்த்ததும், பயத்தில் வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதில் மோஹ்சின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல் பரிசோதனைக்குப்பின் அவரது உறவினரிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர்.

இதற்கிடையே காதலி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளன.

    Leave a Reply