காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

காதலனுடன் சமனல வாவியை பார்வையிட வந்த யுவதியை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

சமனல வாவி பிரதேசத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவர் கடந்த 8ஆம் திகதி தனது காதலனுடன் சமனல வாவி பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், காதலனிடம் போதைப்பொருள் இருப்பதாகக் கூறி அவர் வைத்திருந்த பைகள் மற்றும் பணப்பையை சோதனை செய்துள்ளார்.

பின்னர் காதலரின் ஒரு கையில் கைவிலங்கு இட்டு, கைவிலங்கின் மற்றப் பகுதியை மோட்டார் சைக்கிளில் இணைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் சமனல வாவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஏற்கனவே யுவதியின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மொனராகலை பிரிவில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.