காணமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் எதற்கு – விக்கி காட்டம் .

இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் – காணமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் எதற்கு – விக்கி காட்டம் .

இலங்கையில் மகிந்த ஆட்சியின் பொழுது கடத்த பட்டு காணாமல் ஆக்க பட்ட உறவுகளுக்கு அரசு மரண சான்றிதழ் வழங்கி வருகிறது .

காணமல் போனவர்கள் தொடர்பில் திறந்த விசாரணைகளை மேற் கொண்டு அவர்கள் தொடர்பில் விசாரித்து நீதியை நிலை நாட்ட வேண்டும் .

அதனை விடுத்து காணாமல் ஆக்க பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கி வருவது எவ்விதத்தில் நீதியாகும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார் .

இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் தனித்து போட்டியிட உள்ள நிலையில் விக்கினேஸ்வரன் போர்க்குற்றம் ,மற்றும் இன அழிப்பு தொடர்பில் தனது தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார் .

இது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள மேற்கொள்ளும் நகர்வா .? அல்லது உண்மையில் மக்கள் மீது கொண்ட கரிசனையா என்பதை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இப்பொழுதே கூறி வைத்து கொள்ளலாம் .

அரசியல் வியாபாரிகள் மலிந்து போயுள்ள இலங்கை தீவில் இவை எல்லாம் ஒரு வேற்று நாடகம் , கோசம் என மக்கள் மூணு முணுக்கத் தான் செய்கின்றனர் .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply