காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லயன் கொள்ளையடித்த கும்பல் கைது

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது

ஜேர்மனியில் டஜன் கணக்கான பண இயந்திரங்களை தகர்த்து ,
அதில் இருந்து 5.2 மில்லியன் யூரோக்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ,
ஒன்பது ஆண்கள் நெதர்லாந்து மற்றும் ,பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு நாடுகளில் உள்ள 16 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது,
இந்த மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிக்க பட்டனர் .

சந்தேகநபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும்,
நெதர்லாந்து அல்லது பெல்ஜியத்தில் வசிக்கும் டச்சு, மொராக்கோ, ஆப்கான்,
துருக்கி மற்றும் ருமேனிய பிரஜைகள் என குற்ற தடுப்பு பிரிவு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .