கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்

தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
Spread the love

கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்

பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞன், குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்

குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று தாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது அந்தப் பெண்ணுடன் குறித்த இளைஞர் நிர்வாணமாகப் படம் பிடித்துள்ளார்.

அதனையடுத்து அந்த நிர்வாணப் புகைப்படங்களை பெண்ணின் கணவரிடம் காட்டுவதாகக் கூறி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,785,000 பெறுமதியான தங்க நகைகளை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

நீர்கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.