கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இதனை SHARE பண்ணுங்க

கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை

எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பொலிஸார் எம்பிலிபிட்டிய ஆயுர்வேத வீதி பகுதியில் பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை

சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதோடு, உரிமையாளரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர், அவர்களை தேடி ஹோட்டலின் உரிமையாளர் மேலும் இருவருடன் காரில் வந்து குறித்த பெண்ணைக் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய
மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க