கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்கள் -யாக்கிரதை

இதனை SHARE பண்ணுங்க

கட்டுநாயக்க ச விமான நிலையம் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இந்த புதிய போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையம் முகாமைத்துவ தலைவர் எச்.எஸ். ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த போக்குவரத்து திட்டத்திற்கு அமைய கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வருகைத்தரும் வாகனங்கள் எதிர்க்கொள்ளும் முதலாவது நுழைவாயிலை பயன்படுத்த முடியும்.

அதேபோல் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

அவ்வாறு வருகை தரும் வாகனங்கள் வெளிச்செல்வதற்கான அறிவுறுத்தல்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை வழிக்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply