கஞ்சா செடிகள் சிக்கின| இலங்கை செய்திகள்

கஞ்சா செடிகள் சிக்கின| இலங்கை செய்திகள்
இதனை SHARE பண்ணுங்க

கஞ்சா செடிகள் சிக்கின | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பனாமுர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பனாமுர தொடம்வத்த பகுதியில் நேற்று (21)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 26,635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இதிகாட்டிய மற்றும் முள்எட்டியாவல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 50 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனை SHARE பண்ணுங்க