கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
இதனை SHARE பண்ணுங்க

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட எதிமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாச பொலிஸ் மா அதிபரினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார அண்மையில் 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

முன்னதாக, மொனராகலையில் உள்ள எஸ்.எஸ்.பி.யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கஞ்சா செடிகளுடன் எஸ்.எஸ்.பி, இரண்டு பொலிசார் மற்றும் மூன்று சிவிலியன்களை STF கைது செய்தது.

பின்னர், எஸ்எஸ்பி சிசிர குமார ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன.

பொலிஸ் அத்தியட்சகர் குமார, எதிமலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தர்மதாச மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சாரதி சசிந்து மதுஷன் உள்ளிட்ட சந்தேக நபர்களை ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க