கச்சத்தீவில் சின்ன புத்தர்-கடற்படை விளக்கம்

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
Spread the love

கச்சத்தீவில் சின்ன புத்தர்-கடற்படை விளக்கம்

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (27) விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்துக் கடற்படையினர் தெரிவித்ததாவது” கச்சத்தீவானது சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். இத்தீவின் பாதுகாப்புக் கருதி கடற்படைக் குழுவொன்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இக்கடற்படைக் குழுவினர் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தயும் பாதுகாத்து வருகின்றனர்.

இத்தேவாலயமானது வருடாந்தப் பெருவிழாவின் போது மாத்திரமல்லாது தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் கடற்படையினர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கச்சத்தீவில் சின்ன புத்தர்-கடற்படை விளக்கம்

இப்பகுதியில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகவே ஒரு சிறிய புத்தர் சிலையொன்று கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தேவாலயத்தைத் தவிர, இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் செய்ய முடியாது என்பதால் கடற்படையினர் தற்காலிகமாக கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, இத் தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை, எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது” இவ்வாறு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No posts found.