ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Spread the love

ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன.

இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில் அது நாட்டை வந்தடையும் எனவும் அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கடைசி முட்டை இருப்புக்கான அனுமதியை நேற்று வழங்கியது.

பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த முட்டைகளை
விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.