ஏன் அழுகிறாள் ..!
ஆடி வரும் காற்று போல
அன்று உடல் தழுவியவள் ..
இன்று விட்டு போனதென்ன ..?
இதயம் மறந்து நின்றதென்ன ..?
கூண்டுடைத்து பறந்திட தான்
கூண்டு கிளி முனைந்ததென்ன …?
காடு மேவி வந்ததினால்
காமம் கணக்க பறந்ததுவோ …?
கூவி வரும் குயில் பாட்டை
கூடுடைத்து கேட்டு நிற்பின் …
வாழ்வு பயிர் வாடிவிடும்
வாயில் கோலம் புரியலையோ ..?
ஏது சொல்லி இயம்பிடுவேன்
என் மனதின் வேதனையை ..?
காறி உன்னில் உமிழ்ந்திடவோ
கட்டி தாலி பற்றி வந்தேன் …?
பறந்த கிளி மகிழ்வுறுமோ ..?- வந்தான்
பாசமதில் குளித்திடுமோ …?
நொந்து நொந்து அழுது இன்று
நோகும் வாழ்வில் ஏன் மிதந்தாய் …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/08/2019