எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அரசாங்கத்தால் எரிபொருள் விலைகளைக் குறைந்தது ரூ. 120 ஆல் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி (SUTUF) ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்தார்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் சில்லறை விலை குறைந்தது 125 ரூபாவால் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

ஒரு லீற்றர் நாப்தா (naptha) எண்ணெய், பெர்னெஸ் (furnace) மற்றும் மண்ணெண்னையின் விலைகளை இடையூறின்றி 110 ரூபாயால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஏப்ரல் முதலாம் திகதி செய்யப்படவுள்ள எரிபொருள் விலை சீர்திருத்தத்தின் மூலம் மக்கள் பயன்பெறக்கூடிய அளவு விலைகள் குறைக்கப்படலாம் என இதற்கு முன்னதாக எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்

ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விலை குறைக்கப்பட்டால் மின் கட்டணத்தில் கணிசமான குறைப்பு ஏற்படும். நாப்தா மற்றும் டீசல் எரிபொருள் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களால் 100% சுத்திகரிக்கப்படுகிறது.

உலக சந்தையிலிருந்து மசகு எண்ணெய் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்படுகிறது. அதற்கேற்ப நாப்தா, பர்னேஸ் மற்றும் மண்ணெண்ணையின் விலைகளை சற்று அதிகளவில் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு அதிக நன்மையை வழங்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலையை 100 ரூபாயால் குறைக்க முடியும். மீதித் தொகையை உள்ளுர் சந்தையில் டீசலின் சில்லறை விலையைக் குறைக்க வழங்கலாம்.

வரி செலுத்திய பின், கடந்த மாதம் 9 பில்லியன் ரூபாய் இலாபத்தையும், ஜனவரி மாதம் 12 பில்லியன் ரூபாய் இலாபமும் ஈட்டியதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விற்பனை மூலம் தற்போது பெருமளவு இலாபமீட்டுவதாக பாலித்த மேலும் தெரிவித்தார்