என்னை கூட உன்னை மாற்று
ஒரு நாள் பிறந்தோம் ஒரு நாள் இறப்போம்
ஓடும் மனிதா புரிவாய் ….
ஓலம் விதைக்க முன்னே கொஞ்சம்
ஒன்றி நீயும் நடப்பாய் ….
இறப்பை தெரியா இடரை புரிந்தாய்
இது தான் உந்தன் மதியோ ..?
இறந்த பின்னே உன்னை சுமந்தார்
இது தான் உந்தன் விதியோ ..?
ஆறாம் அறிவை தட்டி பார்த்தால்
அன்பே நெஞ்சில் ஓங்கும் …
அறியா மாந்தார் அறிவை தேடின்
அகில போரும் மடியும் …
பிறக்கும் போதே நல்லான் என்றே
பிறப்பை எழுதி வைத்தாய் …
இறக்கும் போதே ஏனோ நீயும்
இரக்கமில்லா மடிந்தாய் ..?
இது நாள் வரையில் புரிந்த தவறை
இன்றே நீயும் எறிவாய்….
இனியும் எங்கள் வாழ்வு விடிய
இன்றே திருந்தி செழிப்பாய்….!
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் – 28/01/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்