
எனது மகள் இனி பணிக்கு வரமாட்டார்
தனது மகள் மீண்டும் பணிக்கு திரும்பப் போவதில்லை என எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரின் தந்தை என கூறிக்கொள்ளும் நபர் ஒருவர், வட்ஸ் அப் செயலி ஊடாக வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர் கடந்த வெள்ளிக்கிழமை (01) முதல் பணிக்கு சமூகமளிக்காததால் வைத்தியசாலையின் சத்திரப் சிகிச்சை பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனது மகள் இனி பணிக்கு வரமாட்டார்
மயக்க மருந்து நிபுணர் பணிக்கு வராததால் இரண்டு பிரதான சத்திரசிகிச்சை பிரிவுகள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தற்போது எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு மயக்க மருந்து நிபுணர்களின் சேவை தேவை என வைத்தியசாலையின் உரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.