எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்ஈரானின் கடற்படை, நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள,பாரசீக வளைகுடா கடல் பகுதியில் 3,412 மில்லியன் லிட்டர் ,கடத்தல் எரிபொருளை கடத்தி சென்ற கப்பலை மடக்கி பிடித்து கைப்பற்றியுள்ளது.

IRGC கடற்படையின் 2வது மாவட்டத்தின் மக்கள் தொடர்புத் துறை சனிக்கிழமை ஒரு அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு சுமார் $15 மில்லியன் மதிப்புடையது என்று கூறியது.

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சரக்கு தேசிய ஈரானிய எண்ணெய் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருள், கடத்தல்காரர்களுக்கு பெரும் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், ஈரான், 2019 நவம்பரில் மீண்டும் எரிபொருள் அட்டைகள் மற்றும் ரேஷன் பெட்ரோல் ஆகியவற்றைப் பயன்படுத்தியது, இது கடத்தலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு பகுதியாகும் என ஈரான் தெரிவித்துள்ளது .