உயிர் வாழ இதை செய்வாய் ..!

உயிர் வாழ இதை செய்வாய் ..!

இஞ்சி குடித்து தினமும் வந்தால்
இருமல் சளியும் மாறும்
இன்றே விரட்டும் கொரனோ நோயும்
இடறி வீழ்ந்தே ஓடும்

வெந்தயம் மிளகு வெறும் குடளுண்டால்
வேளை மலமும் கழியும்
மல்லி தேநீர் தினமும் குடித்தால்
மணக்கும் வாயும் மாறும்

நான்கு லீட்டர் தண்ணீர் குடித்தால்
நாளும் நாறும் வியர்வை அகலும்
குருதி சுத்தம் ஆகி உடலும்
குளிர்ச்சி நாளும் பொங்கும்

உண்ணும் உணவில் இலைகள் நாளும்
உயிர்த்தே உண்டு வாரும்
உயிர் வாழுமாண்டு நூறு கூடும்
உண்மை அறிந்து வாழும்

ஆதி மனிதன் வாழ்வில் இவைதான்
அன்று மருந்து பாரும்
அதனை மறந்து உண்டாய் நீயும்
அவதியுற்றாய் ஏனோ கூறும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 13-12-2021

    Leave a Reply