உன்னை மறவேன்

உன்னை மறவேன்

உன்னை மறவேன்

உன் போல உறவொன்றை
உயிரே நான் காணலையே
உயிரோடு ஒட்டி விட்டாய்
உனை மறக்க முடியலையே

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
விண்ணுக்குள்ள தேடுகிறேன்
வின் மீனை காணலையே

நொந்திருந்த வேளையிலே
நோகாமல் நீ உரைத்தாய்
பந்து போல அடித்தார் முன்
பண்பாய் நீ நடந்தாய்

இன்றுன்னை நினைத்தாலும்
இதயம் நெகிழுதடி
ஈர் விழியில் நீர் வடிய
இதயம் கனக்குதடி

நட்பாக கிடைத்தவளே
நான் உன்னை வணங்குகிறேன்
நான் வாழும் வரை
நாளெல்லாம் நீ மொழி வேண்டுகிறேன்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-04-2023