உன்னை எண்ணி வியந்தேன் …!

Spread the love

உன்னை எண்ணி வியந்தேன் …!

நெஞ்சுக்குள் எரிகின்ற தீபம் – நீ
நெடுநாள் வாழும் கோலம்
அன்புக்குள் நீளும் பாலம் – நீ
அழியாத வாழ்வின் காலம்

தென்புக்குள் உறைகின்ற வீரம் – நீ
தெளிந்த கடல்நீர் ஓடம்
ஒன்றுக்குள் ஒன்றான ஓர்மம் – நீ
ஓயா ஒலிக்கின்ற கீதம்

நெஞ்சுக்கு நேர்பேசும் வீரம் – நீ
நெசவாகும் பட்டறை கூடம்
பண்புக்கு முதலான மாடம் – நீ
பகலவன் விடிகின்ற வானம்

அந்திக்குள் ஒளிர்கின்ற ஞாலம் – நீ
அழியா புகழின் மாயம்
சிந்தைக்குள் உதிர்கின்ற பேரம் – நீ
சீரிய நட்பின் உதயம்

முன்னைய வாழ்வின் காலம் -நீ
முன்னே தந்த பாடம்
ஏழ்மைக்கு உதவும் அறம் – நீ
ஏறியே ஆள்வாய் உலகம் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 22-12-2021

    Leave a Reply