உன்னால் அழுகிறேன்

உன்னால் அழுகிறேன்

உன்னால் அழுகிறேன் ..

உன்னை பாட தான்
உயிராய் நினைக்கிறேன்
உள்ளம் அழுவதால்
உயிரோடே வாடுகிறேன்

நினைவுகளை தந்து விட்டு
நீ எங்கே போனாய்
நான் மட்டும் அழுவதற்காய்
நாட்களை ஏன் படைத்தாய்

ஒன்றான நாட்களில்
ஒருமையான காலங்கள்
இன்று நினைத்தாலும்
இதயம் கனக்கிறதே

ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று
ஏன் எனை எறிந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்

கடந்த நாள் ஒன்றில் – உன்
கடப்பை கடக்கையில
தேம்பி தேம்பி அழுதேனே
தெருவெல்லாம் நனைத்தேனே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2023